ஊடகங்களுக்கு எதிராக, தாக்குதல் தொடுப்பேன்: பிரதமர் ரணில் சபையில் தெரிவிப்பு

🕔 November 28, 2016

Ranil - 096டகங்கள் எனக்கு எதிராக தாக்குதல் தொடுத்தால், நானும் ஊடகங்களுக்கு எதிராக தாக்குதல் தொடுப்பேன் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றில் இன்று திங்கட்கிழமை தெரிவித்தார்.

பகிரங்க விமர்சனம் மூலம் மாத்திரமே, அந்த தாக்குதலை  நான் தொடுப்பேன் என்றும் அவர் கூறினார்.

ஊடகத்துறை அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழு நிலை விவாதத்தில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினரும், ஜே.வி.பி. தலைவருமான அனுரகுமார திஸாநாயக்க – சன்டே டைம்ஸ் மற்றும் தெரண போன்ற ஊடகங்களுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நேரடி அழுத்தங்கள், கடந்த ஆட்சிக்காலத்தில் ஊடகங்களுக்கு ஏற்படுத்தப்பட்ட அழுத்தங்கள், தாக்குதல்கள், கொலைகள் சம்பந்தமாக நடத்தப்படும் விசாரணைகள் உரிய முறையில் நடத்தப்படுவதில்லை என தெரிவித்தார்.

அப்போது ஆசனத்தில் இருந்து எழுந்த பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.

ஊடக நிறுவனங்களை தீயிட்டு எரிக்கவோ, பத்திரிகை ஆசிரியர்களை வெள்ளை வானில் கடத்திச் செல்லவோ, படையினர் மூலம் தாக்குதல் நடத்தவோ, ஊடகவியலாளர்களை கொலை செய்யவோ தனக்கும் ஜனாதிபதிக்கும் எந்த தேவையும் இல்லை எனவும் பிரதமர் இதன்போது தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்