பொலிஸார் மீது மிளகாய்தூள் தாக்குதல்; பருத்தித்துறையில் சம்பவம்

🕔 November 22, 2016

police-0897கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொலிஸார் மீது, மிளகாய்த்தூள் தாக்குதல் நடத்தி விட்டு, சிலர் தப்பிச் சென்றுள்ளனர். இச்சம்பவம் யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை நடந்தது.

இதன்போது பாதிக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்  ஒருவர் பருத்தித்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பருத்தித்துறை கெட்டடி சந்தியில் அமைந்துள்ள பொலிஸ் சோதனைச் சாவடியை தாண்டிச்செல்ல முற்பட்ட கப் ரக வாகனமொன்றை பொலிஸார் சோதனையிட முற்பட்டபோது, குறித்த வாகனத்தில் பயணித்தவர்கள் இவ்வாறு மிளகாய்த்தூளை வீசிவிட்டு தப்பிச்சென்றனர்

குறித்த குழுவினர் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களாக இருக்கலாமென பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சந்தேகநபர்களை கைதுசெய்வதற்கான நடவடிக்கை முன்னெடுத்துள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்