மஹிந்த ராஜபக்ஷவுக்கான வசதிகளைச் செய்து கொடுக்குமாறு, பிரதமர் ரணில் உத்தரவு

🕔 November 18, 2016

Ranil - 0998முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சீனாவுக்கான விஜயமொன்றினை மேற்கொள்ளவுள்ள நிலையில், அதற்கான சகல வசதிகளையும் ஏற்பாடு செய்து கொடுக்குமாறு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.

வெளிவிவகார அமைச்சுக்கே – பிரதமர் இவ்வாறு உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை, சீனாவுக்கு வருமாறு அந்த நாட்டு அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதற்கிணங்க, எதிர்வரும் 23 ஆம் திகதி, மஹிந்த ராஜபக்ஷ – சீனாவுக்குச் செல்லவுள்ளார்.

இந்த நிலையிலேயே, அவருக்குரிய சலக வசதிகளையும் செய்து கொடுக்குமாறு, பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்