தலைப்புச் செய்திகள்

அப்ராஜை கண்டால் சொல்லுங்கள்

abraj-098– ரிம்சி ஜலீல் –

குருநாகல், பொதுஹர அலஹிடியாவ முஹம்மது அப்ராஜ் என்பவரை கடந்த 12 நாட்களாக காணவில்லை என்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

24 வயதுடைய வாலிபரான முஹம்மது அப்ராஜ், கையடக்க தொலைபேசி விற்பனையாளராவார்.

இவர் கடந்த 30ஆம் திகதி கொழும்புக்கு சென்று வருவதாகக் கூறி சென்றுள்ளார்.  ஆனால், கையில் எந்தப் பொருட்களையும் அவர்  கொண்டு செல்லவில்லை.

இந்த நிலையில், 12 நாட்களாகியும் இவர் இன்னும் வீடு திரும்பவில்லை

அப்ராஜ் காணாமல் போனமை குறித்து, அவரின் குடும்பத்தினர் குளியாப்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இவரை யாரும் கண்டால் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு தெரியப்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

அப்துல் சமத் (உறவினர்): 072-4874743