அங்கவீனமுற்ற ராணுவத்தினர் மீதான தாக்குதல்; பொலிஸார் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: பிரதமர் உறுதி

🕔 November 12, 2016

Ranil - 096ங்கயீனமுற்ற முன்னாள் ராணுவ வீரர்கள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டபோது, அவர்கள் மீது தாக்குதல் நடத்திய பொலிஸார் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றில் தெரிவித்தார்.

ஒன்றிணைந்த எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன எழுப்பி கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே, பிரதமர் இதனைக் கூறினார்.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்குத் தூண்டிய பொலிஸாரை இனங்காண்பதற்கான விசாரணை நடவடிக்கைகள் நடத்தப்படும் என்றும் இதன்போது பிரதமர் உறுதியளித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் ராணுவ வீரர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்ட நிலையிலும், அவர்கள் தமது ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்தாகவும் பிரதமர் இதன்போது சுட்டிக் காட்டினார்.

இதேவேளை, குறித்த ஆர்ப்பாட்டத்தில் பௌத்த பிக்கு ஒருவர் கலந்து கொண்டமையானது கேள்விக்குரியதாக உள்ளதாகவும் பிரதமர் இதன்போது தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்