பீரிஸ் தலைமையிலான புதிய கட்சிக்கு, கூட்டு எதிரணி ஆதரவில்லை: தினேஸ் குணவர்த்தன

🕔 November 7, 2016

dinesh-gunawardana-097ஜி.எல்.பீரிஸ் தலைமையில் செயற்படவுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு, கூட்டு எதிரணியிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு வழங்க மாட்டார்கள் என கூட்டு எதிர்க் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றிற்கு கருத்து தெரிவிக்கும் போதே, இன்று திங்கட்கிழமை கூட்டு எதிர்க் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன மேற்கண்டவாறு கூறினார்.

ஸ்ரீ.சு.கட்சியிலிருந்து உறுப்புரிமை நீக்கப்பட்டமையை ஏற்றுக்கொள்ள முடியாது. ஸ்ரீலங்கா சுதந்தி கட்சி தமது தீர்மானத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் என, முன்னாள் அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்திருந்த கருத்துக்குப் பதிலளிக்கும் வகையிலேயே தினேஸ் குணவர்தன மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதே வேளை, ஜீ.எல். பீரிஸ் தலைமையில், அட்டர்னி சாகர காரியவசம் செயலாளராக நியமிக்கப்பட, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி, இந்த மாதம் முதலாம் திகதி மலர் மொட்டு சின்னத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

வேறொரு கட்சிக்கு ஜீ.எல். பீரிஸ் தலைமை வகிப்பதால், அவர் சுதந்திரக் கட்சியிலிருந்து நீக்கப்படுகிறார் என, அந்தக் கட்சியின் செயலாளர் துமிந்த திஸாநாயக்க நேற்று தெரிவித்திருந்தமை நினைவுகொள்ளத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்