சஊதி அரேபியாவின் அரச குடும்பத்தின் இளவரசர் ஒருவருக்கு, சிறையில் கடுமையான கசையடித் தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக சஊதி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த சில நாட்கள் முன்பு, கொலை குற்றத்தில் கைது செயப்பட்ட சஊதி அரச குடும்பத்தின் இளவரசர் ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டமை, உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் சஊதியின் ஆளும் ‘அல் சஉத்'(Al Saud) எனும் அரச குடும்பத்தின் இளவரசர் ஒருவருக்கு, ஜித்தாவிலுள்ள சிறையில் நீதிமன்ற உத்தரவுப்படி கடுமையான கசையடிகள் வழங்கப்பட்டுள்ளதாக ‘ஒகாஸ்’ (Okaz) எனும், சஊதி அரேபிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
என்ன குற்றத்துக்காக இளவரசர் தண்டிக்கப்பட்டார் என்று, அந்தச் செய்தியில் குறிப்பிடப்படவில்லை.
இந்த சம்பவம் சஊதி அரேபியாவின் கடுமையான சட்டதிட்டங்களை மீண்டுமொருமுறை உலகுக்கு வெளிப்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.


