இழந்த காணிகளை மீளப் பெற்றுக் கொள்வதற்கான சட்ட ஆலோசனை

பயங்கரவாத அச்சுறுத்தலினால் தமது சொந்த காணிகளை கைவிட்டவர்கள் அல்லது மிகக் குறைந்த விலையில் உயிர் அச்சுறுத்தலின் காரணமாக காணிகளை விற்றவர்கள், சொந்தக் காணிகளை மீளப்பெறுவதற்கான அறிவித்தலுக்கமைவாக விண்ணப்பிக்குமாறு கோரப்பட்டிருந்தனர்.
அவ்வாறு விண்ணப்பித்தவர்களுகே, மேற்படி ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல் நடத்தப்படவுள்ளன.
தலை சிறந்த சட்டத்தரணிகளைக் கொண்டு, மேற்படி சட்ட ஆலோசனைகளை வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மாகாணசபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் தெரிவித்துள்ளார்.
எனவே, எதிர்வரும் 06ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி தொடக்கம் காத்தான்குடி ஹிஸ்புல்லா கலாசார மண்டபத்தில் மேற்படி நிகழ்வு நடைபெறவுள்ளதால் விண்ணப்பித்தவர்கள் மாத்திரம் தவறாது குறித்த நேரத்திற்கு வருகைதருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.