துமிந்த சில்வாவை நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு உத்தரவு

🕔 November 1, 2016

dumintha-01144ரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், சிறை வைக்கப்பட்டிருக்கும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்  துமிந்த சில்வாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கொழும்பு  நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவினைப் பிறப்பித்துள்ளது.

துமிந்த சில்வா-  தனது  சொத்து மதிப்பினை வெளிப்படுத்தவில்லை எனத் தெரிவித்து தொடரப்பட்டுள்ள  வழக்கு நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகின்றது.

இந்த வழக்கு தொடர்பிலேயே துமிந்த சில்வாவை ஆஜர்படுத்துமாறு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை குற்றம் தொடர்பில், துமிந்த சில்வாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்