சிகரட் விலைகள் அதிகரிப்பு

🕔 November 1, 2016

cigarette-03511சிகரெட்டுகளின் விலைகள் 05 ரூபாய் முதல் 10 ரூபாய் வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளன.

15 சதவீத வற் வரி இன்று நொவம்பர் 01ஆம் திகதி முதல் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையிலிலேயே, சிகரட்டுகளுக்கான விலையேற்றம் அமுலுக்கு வந்துள்ளது.

சிகரட்டுக்கான விலையேற்றம் காரணமாக, அதன்மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட வேண்டும் என்று, அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம், போதைப்பழக்கமற்ற ஒரு நாட்டினை உருவாக்குவதே நாட்டின் நோக்கமாகும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

ஏற்கனவே, சிகரட் பெட்களின் 80 வீதமான பகுதிகளில் சிகரட்டினால் ஏற்படும் ஆபத்தான நோய்கள் தொடர்பிலான படங்களைப் பிரசுரிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும், வற் வரி அதிகரிப்பினால் சிகரட் போன்றவற்றுக்கு மட்டுமன்றி தொலைபேசிக் கட்டணங்கள் உள்ளிட்ட பல முக்கிய சேவை மற்றும் பொருட்களின் விலைகளிலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

Comments