தனது வீட்டில் இளைஞர் ஒருவர் மரணமானதை வைத்துக் கொண்டு, சிலர் தன்மீது சேறடிப்பதாக, விமல் வீரவன்ச குற்றச்சாட்டு

🕔 October 28, 2016

Wimal weeravansa - 01ன்னுடைய வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞரின் மரணம் தொடர்பில் வெளியிடப்படும் குற்றச்சாட்டுக்களை தான் மறுப்பதாக, முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

மேற்படி விடயம் தொடர்பில் விமல் வீரவன்ச இன்று வெள்ளிக்கிழமை விடுத்துள்ள அறிக்கையொன்றிலேயே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அந்த அறிக்கையில்;

மரணமான இளைஞர் எனது நண்பரின் நண்பராவார். சம்பவ தினம், மரணித்தவர் உட்பட பல நண்பர்கள் வீட்டில் திரைப்படம் ஒன்றினைப் பார்த்து விட்டே உறங்கச் சென்றுள்ளனர். அன்றைய தினம் நான் வீட்டில் இருக்கவில்லை, கொழும்புக்கு வெளியில் இருந்தேன்.

மரணமான இளைஞர் எனது மகனின் நண்பரும், அயல் வீட்டில் வசிப்பவருமாவார்.

மாரடைப்பினாலேயே குறித்த இளைஞர் மரணித்துள்ளார் என்று பிரேத பரிசோதனை கூறுகிறது. ஆனால், இந்த விடயத்தோடு தொடர்புபடுத்தி  என்னையும் எனது மனைவி மற்றும் பிள்ளைகளையும் இலக்கு வைத்து சில அரசியல் எதிரிகள் சேறடிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments