இஸ்லாமிய திருமணச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள, அமைச்சரவை அனுமதி

🕔 October 26, 2016

wedding-034ஸ்லாமிய திருமணம் மற்றும் விவாகரத்துச் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்வது குறித்து ஆராய அமைச்சரவை உப குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது.

இதற்கான அனுமதியினை அமைச்சரவை வழங்கியுள்ளது.

நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ முன்வைத்த யோசனைக்கு, அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இஸ்லாமிய சட்டத்தின் கீழ் திருமணம் செய்வதற்கான வயதெல்லை மற்றும் அந்த சட்டத்தின் கீழ் வரும் விடயங்கள் சம்பந்தமான ஏற்பாடுகள், இலங்கையும் அங்கம் வகிக்கும் சில சர்வதேச இணக்கங்களுக்கு இசைவாக இல்லை என்பதால், அவற்றில் திருத்தங்களை மேற்கொள்வது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

நியமிக்கப்படவுள்ள அமைச்சரவை உப குழு இதனை ஆராய்ந்த பின்னர், திருத்த யோசனைகள் அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்