மட்டக்குளியில் துப்பாக்கிச் சூடு; நால்வர் பலி, இருவர் ஆபத்தான நிலையில்

🕔 October 23, 2016

Gun shot - 01ட்டக்குளி – சமித்புர பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இனந்தெரியாத நபர்கள் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இந்த சம்பவத்தில் காயமடைந்த ஆறு பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில், அவர்களில் நால்வர் உயிரிழந்ததாகவும், மற்றும் படுகாயமடைந்த இருவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

என்ன காரணத்திற்காக இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது என்பது தொடர்பில் தகவல் வெளியாகவில்லை.

Comments