இளைஞர் தலைமைத்துவ பயிற்சித் திட்டத்தை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

🕔 October 20, 2016

seusl-03
– றிசாத் ஏ காதர் –

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் ‘இளைஞர் தலைமைத்துவ அபிவிருத்தி நிகழ்ச்சிக்கான பயிற்சித் திட்டத்தை’ பூர்த்தி செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று வியாழக் கிழமை, பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அறபு மொழிப் பீட மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

தென்கிழக்குப் பல்கலைக்கழக தொழில் வழிகாட்டல் பிரிவும், ஐக்கியநாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்ட வழிகாட்டல் பிரிவும் இணைந்து மேற்படி பயிற்சி நெறியை நடத்தியது.

பல்கலைக்கழக தொழில் வழிகாட்டல் பிரிவின் பணிப்பாளரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான எம்.எஸ்.எம். ஜலால்தீன் தலைமையில் நடைபெற்ற  இந்நிகழ்வில் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜீம் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

ஐக்கியநாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்ட பிரதிநிதி தனராஜ், ஐக்கியநாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்ட அம்பாரற மாவட்ட வெளிக்கள திட்ட நிபுணர் ராஜிந்தர ரோஹித்த வெலிஹிந்தகே, ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வீ. ஜெகதீஸன், இறக்காமம் பிரதேசசெயலாளர் எம். எம். எம். நஸீர், நாவிதன்வெளி பிரதேசசெயலாளர் எஸ். கரன், பொத்துவில் பிரதேசசெயலாளர் என்.எம். முஹம்மத் முஸர்ரத், சம்மாந்துறை பிரதேசசெயலாளர் ஏ. மன்சூர் மற்றும் திருக்கோவில் உதவிப் பிரதேச செயலாளர் சி.ஜெயரூபன் ஆகியோர் இந் நிகழ்வில் அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.

மேற்படி பயிற்சி நெறியை பூர்த்தி செய்த அம்பாறை மாவட்ட மாணவர்கள் 97 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன், இப்பயிற்சி நெறியின்ப வளவாளர்களான பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும்  ஐக்கியநாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் அதிகாரிகள் ஆகியோருக்கும் சான்றிழ்கள் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.seusl-05 seusl-04 seusl-01 seusl-02

Comments

புதிது பேஸ்புக் பக்கம்