கிழக்கு மாகாண கராத்தே சுற்றுப்போட்டி: அம்பாறை மாவட்ட வீரர்கள் அதிக பதக்கம்

🕔 October 15, 2016


ஸ்ரீ
லங்கா கராத்தே சம்மேளனத்தின் கிழக்கு மாகாண கராத்தே சுற்றுப்போட்டி, நேற்று வெள்ளிக்கிழமை சம்மாந்துறை உள்ளக விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

ஸ்ரீலங்கா கராத்தே சம்மேளனத்தின் கிழக்கு மாகான சம்மேளன தலைவர் முகம்மத் இக்பால் தலைமையில் நடைபெற்ற இப்போட்டியில் திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய மூன்று மாவட்டங்களையும் சேர்ந்த சுமார் இருநூறு வீரர்கள் கலந்துகொண்டனர்.

இதில் அம்பாறை மாவட்ட வீரர்கள் அதிக பதக்கங்களை பெற்றுக்கொண்டனர்.

இப்போட்டியானது ஆறு வயது தொடக்கம் பதின்மூன்று வயது வரையான Sub Junior, 14/15 வயதுடைய Cadet பிரிவு,  16/17 வயதுடைய Junior, 21 வயதுக்கு கீழ்பட்டவர்கள் மற்றும் 21 வயதுக்கு மேற்பட்ட சிரேஷ்ட பிரிவினர்கள் எனவும் கிலோ அடிப்படையிலும் நடைபெற்றது.

இப்போட்டியின் ஒவ்வொரு பிரிவிலும் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெற்ற வீரர்கள் தேசிய போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

தேசிய கராத்தே போட்டி எதிர்வரும் இம்மாதம் 25 ஆம் திகதி முதல், 28 ஆம் திகதி வரை கொழும்பு, சுகததாச உள்ளக அரங்கில் நடைபெற உள்ளது.karatte-09877 karatte-09876

Comments