ஹெரோயினுடன் இளைஞர் இருவர் கைது

🕔 October 14, 2016

heroin-098
– க. கி
ஷாந்தன் –

ரு தொகை ஹெரோயினுடன் இரண்டு இளைஞர்கள்வெள்ளிக்கிழமை மாலை எல்ல நகரில் வைத்து கைது செய்துள்ளனர்.

குறித்த ஹெரோயினை மோட்டார் சைக்கிளில் பண்டாரவளை பிரதேசத்திலிருந்து வெல்லவாய பிரதேசத்திற்கு கொண்டு சென்றுக் கொண்டிருந்தபோதே, இவர்களை எல்ல பொலிஸார் கைது செய்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலொன்றினை அடிப்படையாகக் கொண்டு, குறித்த சந்தேக நபர்களை சோதனையிடும் போது ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதன்போது இவர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும், 02 தொலைபேசிகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த ஹெரோயின் தொகையின் சந்தை பெறுமதி சுமார் ஒரு லட்சத்து இருபது ஆயிரம் ரூபாய் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்டுள்ள இரு இளைஞர்களும் பண்டாரவளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.heroin-097

Comments