மைத்திரியுடன் முறுகலுக்குத் தயாரான ஐ.தே.வின் முயற்சியை, தடுத்தார் ரணில்

🕔 October 14, 2016

ranil-0987னாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் விளக்கமளிக்கப்பதற்காக ஐக்கிய தேசியக் கட்சினர் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்புக்களை, ஐ.தே.கட்சி தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலையிட்டு ரத்துச் செய்துள்ளார்.

ஜனாதிபதி வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளிப்பது,  கூட்டு எதிர்க்கட்சிக்கு சாதகமாக கூடும் என்பது பிரதமரின் நிலைப்பாடாகும்.

எனவே, ஐக்கிய தேசிய கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பை உடனடியாக ரத்து செய்யுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க, உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்ததாத் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கமைய நேற்று வியாழக்கிழமை அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பும், இன்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிகார் பங்குப்பற்றலுடன் இடம்பெறவிருந்த ஊடகவியலாளர் சந்திப்பும் ரத்துச் செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை, ஜனாதிபதியின் கருத்துக்கு ஊடகத்தினூடாக பதிலளித்த அமைச்சர் சுஜீவ சேனசிங்க, ஜனாதிபதி வெளியிட்ட கருத்து அவருடைய தனிப்பட்ட கருத்து மாத்திரமே எனவும், அது அரசாங்கத்தின் கொள்கையல்ல என்றும் குறிப்பிட்டிருந்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்