சிராஸ் மீராசாஹிப்; லங்கா அசோக் லேலண்ட் நிறுவன தலைவராக நியமனம்

🕔 October 13, 2016

ziras-meerasahib-086
– முக்தார் அஹமட் – 

ல்முனை மாநகரசபையின் முன்னாள் மேயரும் தொழிலதிபருமான சிராஸ் மீராசாஹிப், லங்கா அசோக் லேலண்ட் நிறுவன தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவருமான றிசாத் பதியுத்தின் இந்த நியமனத்தை வழங்கியுள்ளார்.

முஸ்லிம் காங்கிரசிலிருந்து பிரிந்து சென்ற பின்னர், அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்த சிராஸ் மீராசாஹிப், சில காலமாக – அந்தக் கட்சியின் செயற்பாடுகளிலிருந்தும் தூரமாகியிருந்தார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதித் தலைவரும், சாய்ந்தமருதுப் பிரதேசத்தைச் சேர்ந்தவருமான ஏ .எம். ஜெமீலுடன் ஏற்பாட்ட முரண்பாடுகள் காரணமாகவே, சிராஸ் இவ்வாறு விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. சிராஸ் மீராசாஹிப்பும் சாய்ந்தமருது பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.

ஆயினும், நேற்றைய சந்திப்பின் போது – சிராஸ் மற்றும் ஜெமீல் ஆகியோர் முரண்பாடுகளை மறந்து, இணைந்துள்ளனர்.

இந்த நிலையில், சாய்ந்தமருது பிரதேசத்தின் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் மத்திய குழுவை நேற்று புதன்கிழமை இரவு கொழும்புக்கு வரவழைத்த  கட்சித் தலைவர் றிசாத்பதியுதீன், நீண்ட கலந்துரையாடலில் ஈடுபட்டதாகத் தெரியவருகிறது.

இதனையடுத்து சாய்ந்தமருது மத்திய குழுத் தலைவராக அன்வர் ஹாஜியார் செயற்படுவார் எனவும், சாய்ந்தமருதின் அமைப்பாளராகவும் அப்பிரதேச அரசியல் அதிகாரமுடையவராகவும் – கட்சியின் பிரதித் தலைவரும் இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபன தலைவருமாகிய ஏ.எம். ஜெமில் செயற்படுவார் எனவும் ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டது.

சிராஸ் மீராசாஹிப்புக்கான நியமனத்துடன் –  கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் கீழுள்ள நான்கு நிறுவனங்களின் தலைவர் பதவிகளுக்கு, அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த நால்வர் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவர்களில் இருவர் சாய்ந்தமருதுப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர்.ziras-meerasahib-08211

Comments

புதிது பேஸ்புக் பக்கம்