இறக்காமம் கோட்டப் பாடசாலை மாணவர்களுக்கு, இஸ்லாமிக் ரிலீப் உதவி
🕔 October 10, 2016


– றிஜாஸ் அஹமட் –
இறக்காமக் கோட்டப் பாடசாலைகளில் கல்வி கற்கும் வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் துவிச்சக்கர வண்டிகள் வழங்கும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை இறக்காமம் மௌலானா மண்டபத்தில் இடம்பெற்றது.
இஸ்லாமிக் ரிலீப் ஸ்ரீலங்கா அமைப்பு இந் நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தது.
இஸ்லாமிக் ரிலீப் கனடா அமைப்பினால் வழங்கப்பட்ட நிதியினைக் கொண்டு, மாாணவர்களுக்கான மேற்படி உதவிகள் வழங்கப்பட்டன.
இஸ்லாமிக் ரிலீப் அமைப்பின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி எம். இப்றாஹிம் சப்றி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இறக்காமம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர் பொறியியலாளர். எஸ்.ஐ. மன்சூர் கலந்து கொண்டு, மாணவர்களுக்கான உதவிகளை வழங்கி வைத்தார்.
மேலும் பிரதேச செயலாளர் எம்.எம். நசீர், இறக்கமம் கோட்டக் கல்வி அதிகாரி மஹ்மூத் லெப்பை மற்றும் பாடசாலை அதிபர்களும் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Comments

