காணிப் பிரச்சினையில் மு.கா. தலைவரின் இரட்டை வேடம்; அம்பலப்படுத்துகின்றனர் பாதிக்கப்பட்ட மக்கள்

🕔 October 8, 2016

Hakeem - 09– அஹமட் –

ம்பாறை மாவட்டத்திலுள்ள மேய்ச்சல் தரைக் காணி விவகாரம் தொடர்பில், முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம், நேற்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றில் உரையாற்றிய போதிலும், இந்த மாவட்டத்திலுள்ள காணிப் பிரச்சினைகள் குறித்து, மு.கா. தலைவர் ஹக்கீம் மிகவும் அலட்சியமான மனப்போக்குடன் நடந்து கொள்வதாக பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகின்றனர்.

நாடாளுமன்றில் காணி விகாரம் தொடர்பில் உணர்ச்சி பொங்க – மு.கா. தலைவர் பேசுகின்ற போதிலும், காணியை இழந்த மக்கள் – மு.கா. தலைவரைச் சந்திக்கும் தருணங்களில், மக்களுடன்  மு.கா. தலைவர் அவநம்பிக்கை தரும் வகையில் நடந்து கொள்வதாகக் கூறப்படுகிறது.

அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட அஷ்ரப் நகரில் வாழும் பொதுமக்களின் வாழ்விடங்களை ராணுவத்தினர் ஆக்கிரமித்து, அங்கு கடந்த 05 வருடங்களாக முகாம் அமைத்துள்ள போதும், அதனை உரிய மக்களுக்குப் பெற்றுக் கொடுப்பதில் மு.கா. தலைவர் இதுவரை எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என்று பாதிக்கப்பட்ட மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

அஷ்ரப் நகரில் – தமது காணிகளை ராணுவத்தினர் ஆக்கிரமித்துள்ளமைக்கு எதிராக, காணியைப் பறிகொடுத்த இருவர் நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு வழக்குத் தொடர்வதற்காகக, பாதிக்கப்பட்ட மக்களுக்கு முஸ்லிம் காங்கிரஸ் எதுவித நிதி உதவிகளையும் வழங்கவில்லை என்பதோடு, சட்டத்தரணிகளைக் கூட பெற்றுக்கொடுக்க முன்வரவில்லை.

முஸ்லிம் காங்கிரஸில் ஏராளமான சட்டத்தரணிகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

அட்டாளைச்சேனையில் அண்மையில் நடைபெற்ற நடமாடும் சேவையின் போது, மு.காங்கிரஸ் தலைவரை தாம் சந்தித்ததாகவும், ஆனால் தமது காணிகளை ராணுவத்தினர் ஆக்கிரமித்தமைக்கு உரிய தீர்வினைப் பெற்றும் தரும் வகையில் மு.கா. தலைவர் நடந்து கொள்ளவில்லை என்றும், அஷ்ரப் நகர் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, மு.கா. தலைவரை மீளவும் சந்திப்பதற்கான சந்தர்ப்பங்களும் தமக்குக் கிடைக்கவில்லை என்றும், அஷ்ரப் நகரில் பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர்.

வீடியோ

Comments