பசில் ஏற்க மறுத்த 16 ஏக்கர் காணி, ஒரு வீடு; விற்பனை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு

🕔 October 8, 2016

basil-086ல்வானையில் உள்ள காணி மற்றும் அதில் அமைக்கப்பட்டுள்ள வீடு ஆகியவை தனக்குரியவை அல்ல என்று,  முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ நீதிமன்றில் தெரிவித்தமையினை அடுத்து,  குறித்த காணியை விற்பனை செய்து, அதற்கான பணத்தை அரசிடம் ஒப்படைக்குமாறு பூகொட நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

பசில் ராஜபக்ஷவுக்குச் சொந்தமானது எனக் கூறப்படும் மல்வானையில் உள்ள சர்ச்சைக்குரிய 16 ஏக்கர் காணி தொடர்பான வழக்கு, நேற்று வெள்ளிக்கிழமை பூகொட நீதவான் ருவன்பதிரண முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது பசில் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மல்வானையிலுள்ள காணி பசிலுக்கு சொந்தமானதல்ல என வாதிட்டார்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, குறித்த காணியை விற்று பணத்தை அரசாங்கத்திடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

நேற்றைய விசாரணைகளின் போது பசிலும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்