15 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது: கிண்ணியாவில் சம்பவம்

🕔 October 8, 2016

Rape - 011– எப். முபாரக் –

திருகோணமலை – கிண்ணியா பொலிஸ் பிரிவுற்குற்பட்ட பகுதியில் சொந்த மகளை பாலிஸ் துஷ்பிரயோகத்திற்குற்படுத்திய தந்தையை, நேற்று வெள்ளிக்கிழமை இரவு கைது செய்ததாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.

கிண்ணியா – இடிமன், புதுநகர் பகுதியைச்சேர்ந்த பாருக் ரமீஸ் (40 வயது) என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

தாய் வௌிநாட்டில் உள்ள நிலையில், 15 வயதுடைய சிறுமி தந்தையுடன் இருந்ததாகவும், இதன்போதே – அவர் பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டதாகவும் கடந்த ஏப்ரல் மாதம் 16ம் திகதி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டபோதிலும்,  தந்தை தலைமறைவாகி இருந்தார். இந்த நிலையில் உறவினர்களின் வீட்டில் சிறுமி தங்கியிருந்தார்.

சிறுமியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் தேடப்பட்டு வந்த தந்தையை, நேற்றிரவு கைது செய்ததாகத் தெரிவித்த கிண்ணியா பொலிஸார், சந்தேக நபரை திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகக் கூறினர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்