குளவி கொட்டிய 20 மாணவர்கள், வைத்தியசாலையில் அனுமதி

🕔 September 22, 2016

wasp-attack-011
– க. கிஷாந்தன் –

குளவி கொட்டுக்குள்ளான நிலையில் நோர்வூட் எலிபட தமிழ் வித்தியாலயத்தைச் சேர்ந்த 20 மாணவர்கள், இன்று வியாழக்கிழமை காலை பொகவந்தலாவை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தரம் 8,9 மற்றும் 11 ஆகிய வகுப்புகளில் கல்வி பயிலும் மாணவர்களே இவ்வாறு குளவிக் கொட்டுக்கு உள்ளாகினர் என தெரியவந்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்களில் 10 பேர் பெண் மாணவர்களாவர்.

பாடசாலைக்கு அருகிலுள்ள மரத்தில் கூடு கட்டியிருந்த குளவிகள் கலைந்து, மாணவர்களை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.wasp-attack-033 wasp-attack-022

Comments

புதிது பேஸ்புக் பக்கம்