வருடத்தின் இறுதி சந்திர கிரகணம் இன்று
சந்திர கிரகணம் இன்று வெள்ளிக்கிழமை நிகழவுள்ளது. இது – இந்த வருடத்தின் இறுதி சந்திர கிரகணமாகும்.
இந்த கிரகணத்தை இன்று இரவு பார்க்க முடியும் என இலங்கை விண்வெளி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சந்திர கிரகணம் இரவு 10.24 மணிக்கு ஆரம்மாகி அதிகாலை வரை தென்படும். ஆயினும், நள்ளிரவு 12.24 மணிக்கு முழுமையான சந்திர கிரகணத்தைக் காண முடியும் எனக் கூறப்படுகிறது.