குழந்தைகள் இருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில், 67 வயது நபர் கைது

🕔 September 8, 2016

Rape - 011– க. கிஷாந்தன் –

ரண்டு பெண் குழந்தைகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கிய 67 வயதுடைய நபரொருவரை நுவரெலியா பொலிஸார் நேற்று புதன்கிழமை இரவு கைது செய்துள்ளனர்.

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பம்பரகலை தோட்ட மிடில் பிரிவை சேர்ந்த நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

துஷ்பிரயோகத்துக்கு உள்ளானவர்கள் 04 மற்றும் 06 வயதுகளையுடைய பெண் குழந்தைகள் என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சந்தேக நபரை விந்துலை பொலிஸார் நேற்று இரவு கைது செய்தனர்.

இதேவேளை, பாதிக்கப்பட்ட குழந்தைகள் இருவரும் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர் குறித்த இரு சிறுமிகளையும் மாடுகள் வளர்க்கும் தொழுவத்துக்கு அழைத்து சென்று துஷ்பிரயோகம் செய்துள்ளார் என்று, பொலிஸாரின் ஆரம்பக் கட்ட விசாரனைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்