காணாமல் போனதாகக் கூறப்பட்ட நபர், ஒளிந்திருந்தபோது கைது

🕔 September 7, 2016

Nasrin - 0112திருகோணமலையிலுள்ள வங்கியொன்றில், ஏலத்தில் நகைகளைக் கொள்வனவு செய்யச் சென்றபோது, காணாமல் போனதாகக் கூறப்பட்ட களுத்துறை மாவட்டம் அட்டுலுகம – மாவத்த பகுதியைச்சேர்ந்த எம்.எச். நஸ்ரின் (36 வயது) எனும் நபரை பொலிஸார் இன்று புதன்கிழமை கைது செய்துள்ளனர்.

குறித்த நபர், ஹல்துமுல்ல பகுதியில் மறைந்திருந்தபோது பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை பெருந்தொகைப் பணத்துடன் காணாமல் போனதாக, திருகோணமலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

இதனையடுத்து பொலிஸார் ஐந்து குழுவாக மேற்படி நபரைத் தேடும் பணியில் இறங்கியிருந்தனர்.

Comments