பேஸ்புக் தொடர்பில், 1570 முறைப்பாடுகள்

🕔 September 6, 2016

facebook complaints - 011பேஸ்புக் தொடர்பாக இந்த வருடத்தில் முதல் எட்டு மாதங்களுக்குள் 1570 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக, இலங்கை கணினி அவசர நடவடிக்கைப் பிரிவின் பாதுகாப்பு பொறியியலாளலர் ரொசான் சந்திரகுப்தா தெரிவித்துள்ளார்.

கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில் போலியான கணக்குகள் மற்றும் பேஸ்புக் கணக்குகளில் சட்டவிரோதமாக உள்நுழைந்தமை தொடர்பிலேயே அதிக முறைபாடுகள் கிடைத்துள்ளதாக ரொசான் சந்திரகுப்தா கூறியுள்ளார்.

முறைபாடுகளுக்கு அமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், அது தொடர்பில் தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

அத்துடன், இணையம் ஊடாக நிதி மோசடி இடம்பெறுகின்றமை தொடர்பாகவும், சில முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன எனவும் அவர் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்