தூதுவர் அன்சார் மீதான தாக்குதல் தொடர்பில், மலேசியாவிடம் இலங்கை கவலை தெரிவிப்பு

🕔 September 5, 2016

Srilanka+Malasia - 001லேஷியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் இப்றாகிம் அன்சார் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில், கவலை தெரிவித்து, இலங்கைக்கான மலேஷிய உயர்ஸ்தானிகருக்கு இலங்கை வௌிவிவகார செயலாளர் அறிக்கையொன்றினை அனுப்பி வைத்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக, மலேசியாவிலுள்ள எல்.ரி.ரி.ஈ ஆதரவாளர்களால் ஆர்ப்பாட்டமொன்று நேற்றைய தினம் நடத்தப்பட்டது.

இதன்போது, மலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் அன்சார் மீது கோலாலம்பூர் விமான நிலையத்தில் வைத்து, ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்குதல் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Comments