முஸ்லிம்களை அழிக்கப் போவதாகக் கூறிய ஆசாமியைக் கைது செய்யுமாறு, பிரதமர் பணிப்புரை

🕔 August 24, 2016

Sinha le - 00051“இலங்கையிலுள்ள முஸ்லிம் மக்களை அரை மணி நேரத்தில் அழித்துவிடுவோம்” என எச்சரிக்கை விடுத்த நபரைக் கைது செய்யுமாறு, பிரதமர் ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

மேற்படி நபர்  ‘சிங்ஹ லே’ அமைப்பின் ஆதரவாளராவார்.

பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு இந்தப் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

‘எல்லோருக்கும் ஒரே ரத்தம்’ என்ற தொனிப்பொருளில், அண்மையில் இடம்பெற்ற அமைதிப்பேரணியில் குழப்பம் விளைவித்த ‘சிங்ஹ லே’ அமைப்பின் ஆதரவாளர் ஒருவர் ‘இலங்கையிலுள்ள முஸ்லிம்களை அரை மணி நேரத்தில் அழித்துவிடுவோம்’ என சவால் விடுத்ததோடு, இது சிங்கள நாடு எனவும் ஆக்ரோஷமாக கோஷமிட்டார்.

‘எல்லோருக்கும் ஒரே ரத்தம்’ பேரணியில் மத்திய மாகாணசபையின் முன்னாள் உறுப்பினரும், தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவருமான ஆசாத் சாலியும் கலந்து கொண்டார்.

மேற்படி அச்சுத்தல் தொடர்பில் கொழும்பு கறுவாத்தோட்டம் பொலிஸ் நிலையத்தில், நேற்று செவ்வாய்க்கிழமை இரண்டு முறைப்பாடுகள் செய்யப்பட்டன.

தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி மற்றும் சட்டத்தரணி ஹிஜாஸ் அஸ்லம் ஆகியோர், இந்த முறைப்பாடுகள் பதிவு செய்திருந்தனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்