என்னை தேசத் துரோகி என்கிறார்கள்; பிரபாகரனுக்கு நான் பணம் வழங்கவில்லை: பிரதமர் ரணில்

🕔 August 19, 2016
Ranil - 0551திருடர்களை விரட்டி விட்டு, நாட்டை அபிவிருத்தி நோக்கி நகர்த்திக் கொண்டிருக்கும் தன்னை தேசத்துரோகி என்று சிலர் கூறுவதாகவும், பிரபாகரனுக்கு பணம் வழங்கி, தேர்தலில் தான் வாக்குகளைப் பெற்றுக் கொள்ளவில்லை என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

சர்வதேசத்திடம் கடன்களை பெற்றுக்கொண்டு,  நாடு பாதாளத்திற்குள் தள்ளப்பட்ட நிலையில், தொடர்ந்தும் நாட்டை நிர்வகிக்க முடியாத காரணத்தினாலேயே, அரசாங்கத்தை தன்னிடம் ஒப்படைத்ததாகவும் அவர் கூறினார்.

நல்லாட்சி அரசாங்கத்தின் முதலாம் ஆண்டு நிறைவு விழா, மாத்தறை சனத் ஜயசூரிய மைதானத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனை கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்.

“சவாலை ஏற்றுக்கொண்டு தற்போது நாட்டை படிப்படியாக முன்னேற்றி கொண்டிருக்கும் நிலையில் முதலாவது ஆண்டு நிறைவை இன்று கொண்டாடுகிறோம். இரண்டாவது ஆண்டை கொண்டாடும் போது நாடு இதைவிட பாரிய முன்னேற்றத்தை அடைந்திருக்கும்.

கிரிக்கெட் நிறுவனத்தில் இருந்த திருடர்கள் விரட்டப்பட்ட பின்னர் இலங்கை கிரிக்கெட் அணி தற்போது வெற்றிகளை உறுதிப்படுத்தி வருகிறது. நாட்டில் இருந்த திருடர்கள் விரட்டப்பட்ட பின்னர் நாட்டின் அபிவிருத்தி கைகூடியுள்ளது.

என்னை தேசத்துரோகி என்று கூறுகிறார்கள். நான் பிரபாகரனுக்கு பணம் வழங்கி தேர்தலில் வாக்குகளைப் பெற்றுக் கொள்ளவில்லை” என்றார்.

இதன்போது, இணைந்து ஊரை முன்னேற்றுவோம், இணைந்து நாட்டை முன்னேற்றுவோம், இணைந்து எதிர்காலத்தை கட்டியெழுப்புவோம் என அனைவருக்கும் அழைப்பு விடுத்த பிரதமர், வேறு வேறாக பிரிந்து போட்டியிடுவோம் என்று கூறினார்.

இதனூடாக உலகுக்கு புதிய அரசியல் கலாசாரமொன்றினைக் காட்ட வேண்டும்மென்றும் பிரதமர் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்