அமெரிக்க, இலங்கை படைகள் இணைந்து நடத்தும், வைத்திய சிகிச்சை முகாம்
🕔 August 16, 2016
– அஷ்ரப் ஏ சமத் –
அமெரிக்காவின் பசுபிக் கட்டளைப் பிரிவின் 60ஆவது விமானப்படை பிரிவு, இலங்கை விமானப்படையுடன் இணைந்து , வட மாகாணத்தில் வைத்திய சிகிச்சை முகாமொன்றை ஆரம்பித்துள்ளது.
இன்று செவ்வாய்கிழமை முதல், எதிர்வரும் 20 ஆம் திகதி சனிக்கிழமை வரை, இந்த முகாம் நடைபெறவுள்ளது.
இன்றைய தினம் புங்குடு தீவில் இந்த வைத்திய சிகிச்சை முகாம் நடைபெற்று வருகிறது.
கண், பல் ஆகியவற்றுக்கான சிகிச்சைகளுடன் உடற்சுகாதாரத்துக்கான சிகிச்சைகளும் இங்கு வழங்கப்படுகின்றன.
இந்த வைத்திய சிகிச்சை முகாமில் அமேரிக்க துாதுவா் அதுப் கேசப், அமைச்சா் மனோ கனேசன், பிரதியமைச்சா் விஜயகலா மகேஸ்வரன், எதிா்கட்சித் தலைவா் ரா. சம்பந்தன் மற்றும் வடக்கு முதலமைச்சா் சீ. விக்னேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.