வடக்கில் நடமாடும் சேவை; முஸ்லிம்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு வேண்டுகோள்
– பாறுக் ஷிஹான் –
யாழ்ப்பாணம், சாவகச்சேரி மற்றும் வேலணை ஆகிய மூன்று பிரதேச செயலகப்பிரிவுகளையும் உள்ளடக்கியதாக மீள்குடியேற்றத்துக்கான விசேட நடமாடும் சேவை எதிர்வரும் 20ம் திகதி சனிக்கிழமை யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரியில் இடம்பெறவுள்ளதாக யாழ் மாநகர சபையின் முன்னாள் உறுப்பினரும் மக்கள் பணிமனை தலைவருமான சுபியான் மௌலவி அறிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் மாவட்ட செயலகம் இந்த நடமாடும் சேவையினை ஏற்பாடு செய்துள்ளது.
இதன்போது புதிய மீள்குடியேற்றப் பதிவுகள்,காணியற்றோர் காணிகளை கோருவதற்கான பதிவுகள்,வீட்டுத்திட்டத்துக்கான பதிவுகள் போன்றவற்றுடன், வாழ்வாதார உதவிகளுக்கான பதிவுகள், யாழ் மாநகரசபை அலுவலகத்தின் சோலைவரி மதிப்பீடுகள் மற்றும் வீடமைப்புக்கான அனுமதி தொடர்பிலான பதிவுகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.