உடைந்தது குட்டு; தாருஸ்ஸலாம் தொடர்பில், உயர்பீட உறுப்பினர்கள் எழுதிய கடிதம் அம்பலம்

🕔 August 6, 2016

Hakeem - 9577
– முன்ஸிப் அஹமட் –

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைமையகமான தாருஸ்ஸலாம் கட்டிடம் மற்றும் அந்தக் கட்சியின் சொத்துக்களின் உரித்து, அவற்றின் வருமானங்கள் தொடர்பில் தற்போது பல்வேறு சர்ச்சைகள் தோன்றியுள்ளன.

கட்சியின் தலைமையகம், மற்றும் சொத்துக்களை தலைவர் ஹக்கீம், தனதும் தனக்கு விருப்பமானவர்களின் பெயர்களிலும் மாற்றி எழுதிக் கொண்டார் என்கிற குற்றச்சாட்டுக்கள் பரவலாக முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், தாருஸ்ஸலாம் கட்டிடம் மற்றும் கட்சியின் சொத்துக்கள் தொடர்பில், மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீமிடம் தவிசாளர் பசீர் சேகுதாவூத் எழுத்து மூலம் கேள்வியெழுப்பியிருந்த போதிலும், அதற்கான பதிலை ஹக்கீம் இதுவரை வழங்கவில்லை.

இதேவேளை, கட்சியின் அதி உயர் பீடக் கூட்டங்களில் இதுவரை மேற்படி விடயங்களை யாரும் பேசவில்லை என்றும், ஊடகங்களில் மட்டும்தான் கடிதங்களை எழுதி, தவிசாளர் பசீர் சேகுதாவூத் இதுகுறித்து பேசுகின்றார் எனவும், மு.கா. தலைவர் ஹக்கீம் அண்மையில் தெரிவித்திருந்தார்.

ஆயினும், கட்சியின் சொத்துக்கள் தொடர்பில் – தவிசாளர் பசீர் சேகுதாவூத் பேசுவதற்கு முன்னதாகவே, கட்சியின் அதியுயர் பீடக் கூட்டத்தில் இவ்விவகாரம் பேசப்பட்டமை குறித்து ஆதாரங்கள் வெளியாகியுள்ளன.

மேலும், கட்சி சொத்து தொடர்பில் விளக்கங்களைக் கோரி – மு.காங்கிரசின் அதி உயர்பீட உறுப்பினர்கள் 12 பேர் கையொப்பமிட்டு, கட்சியின் செலாளருக்கு 15 ஒக்டோபர் 2015 அன்று எழுதியிருந்த கடிதமும் தற்போது ஊடகங்களுக்கு வெளியாகியுள்ளன.

கட்சியின் சொத்துக்கள் பற்றி விளக்கமளிக்குமாறு கோரி எழுதப்பட்ட மேற்படி கடிதத்தில், முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீமுடைய பிரத்தியேக செயலாளரும், அவருடைய மச்சான் முறையானவருமான எம். நயீமுல்லாவும் கையொப்பமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த கடிதம் இதுதான்:Letter - SLMC - 0001 Letter - SLMC - 0002

Comments

புதிது பேஸ்புக் பக்கம்