நடைமுறை சட்டத்தின்படி, உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலை நடத்த முடியாது: மஹிந்த தேசப்பிரிய

🕔 August 6, 2016

Mahinda deshapriya - 034டைமுறையிலுள்ள உள்ளூராட்சிமன்ற சட்டத்தின் அடிப்படையில், எதிர்வரும் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்களை நடத்த முடியாது என, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்ற அமைச்சுக்கு, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அனுப்பி வைத்த கடிதம் தமக்கு கிடைத்துள்ளதாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்ற அமைச்சர் பைசர் முஸ்தபா உறுதிப்படுத்தியுள்ளார்.

நடைமுறையிலுள்ள உள்ளூராட்சி மன்ற சட்டத்தில் காணப்படும் 20க்கும் மேற்பட்ட குறைபாடுகள் மேற்படி கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதோடு, அரசியல் சார்பிலான குறைபாடுகள் குறித்தும் விபரிக்கப்பட்டுள்ளன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்