பியசேனவுக்கு விளக்க மறியல்

🕔 July 30, 2016

Piyasena - 0887ம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச். பியசேனவை, எதிர்வரும் 02 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வாகனத்தை, பதவியிழந்த பின்னர் – கையளிக்காமல், தன்வசம் வைத்திருந்தார் எனும் குற்றச்சாட்டில், கொழும்பு குற்றப் பிரிவினர் பியசேனவை நேற்று கைது செய்தனர்.

இந்த நிலையில், கொழும்பு நீதவான் நீதிமன்றில் பியசேன நேற்றைய தினம் ஆஜர் செய்யப்பட்டபோது, அவரை எதிர்வரும் 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

தொடர்பான செய்தி: முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பியசேன கைது

Comments