சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் கைது

🕔 July 21, 2016

Arrestங்கா சதோச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நலின் பெனாண்டோ இன்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு குற்றப் பிரிவினர் இவரைக் கைது செய்துள்ளனர்.

அரச வாகனங்களை துஷ்பிரயோகம் செய்ததாக மேற்கொள்ளப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பிலேயே இவர் கைதாகியுள்ளார்.

சந்தேகநபரை, கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்