தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் புதிய பீடாதிபதியாக கலாநிதி செயினுடீன் தெரிவு

🕔 July 21, 2016

Sainudeen - 0091– எம்.வை. அமீர் –

தென்கிழக்கு பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்தின் புதிய பீடாதிபதியாக கலாநிதி யூ.எல்.செயினுடீன்தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

நான்காவது பீடாதிபதியாக கடமையாற்றிய கலாநிதி எம்.ஐ. எஸ்.சபீனாவுடைய  பதவிக்காலம் முடிவடைந்துள்ள நிலையில் ஐந்தாவது பீடாதிபதியாக கலாநிதி செயினுடீன் தெரிவாகியுள்ளார்.

உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜீம் தலைமையில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற விசேட பீடசபை அமர்வின்போது,  பிரயோக விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதியாக கலாநிதி யூ.எல்.செயினுடீன் ஏகமனதாகத் தெரிவுசெய்யப்பட்டார்.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பௌதீக விஞ்ஞான திணைக்களத்தின் தலைவர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்த கலாநிதி செயினுடீன், பௌதீக விஞ்ஞான திணைக்களத்தினூடாக தெரிவாகும் – முதலாவது பீடாதிபதியாவார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்