ஜனவரியில் உள்ளுராட்சித் தேர்தல்

🕔 July 14, 2016

Chandima weerakkody - 099ள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் 2017ஆம் ஆண்டின் முற்பகுதியில் நடத்தப்படும் என பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் சந்திமவீரக்கொடி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனை குறிப்பிட்டார்.

எதிர்வரும் ஜனவரி மாதம் உள்ளூராட்சி மன்றத்தேர்தல் நடைபெறும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிணங்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கான நேர்முக பரீட்சைகள் தற்சமயம் இடம்பெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

உள்ளூராட்சி மன்றத்தேர்தல்களை எதிர்கொள்வதற்கு சுதந்திரக் கட்சி தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்