மகனைப் பார்க்க, சிறை சென்றார் மஹிந்த

🕔 July 11, 2016

Mahinda and Namal - 012முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜக்ஷ இன்று திங்கட்கிழமை மாலை வெலிகடை சிறைச்சாலைக்கு சென்றார்.

விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள தனது மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவை பார்ப்பதற்காகவே, அவர் வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்றார்.

நிதி மோசடி குற்றச்சாட்டில் – நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால், இன்று கைது செய்யப்பட்ட நாமல் ராஜபக்ஷ கோட்டே நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.

இதனையடுத்து அவரை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்