பூப்புனித நீராட்டு விழாவில் கத்திக் குத்து; பாதிக்கப்பட்ட ஆறு பேர் வைத்தியசாலையில்

🕔 July 9, 2016

Knife - 034– க.கிஷாந்தன் –

பூப்புனித நீராட்டு விழாவுக்குச் சென்றிருந்தவர்களிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தையடுத்து இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் ஆறுபேர் படுகாயமடைந்த நிலையில், சிகிச்சைகளுக்காக வைத்தியாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம்,  மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாமிமலை ஸ்ரஸ்பி தோட்ட தெய்வகந்த பிரிவில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

காயமடைந்தவர்கள், மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர், மேலதிக சிகிச்சைகளுக்காக நாவலப்பிட்டிய ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் பிரதான சந்தேகநபரும்,  மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் காயங்களுடன் அனுமதிக்கப்படடுள்ளதாக வைத்திய அதிகாரி தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக, மஸ்கெலிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டிரோன் ரத்நாயக்க  தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்