பிரதியமைச்சர் பாலிதவுக்கு இருதய சத்திர சிகிச்சை

🕔 July 9, 2016

Palitha - 01பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெருமவுக்கு இருதய சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில், நேற்று வெள்கிக்கிழமை, இந்த சந்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

பிரதியமைச்சர் பாலித தேவரப்பெரும – கடந்த ஜுன் மாதம் 30 ஆம் திகதி, தூக்கிட்டு தற்கொலை செய்ய முயற்சித்தார்.

முன்னதாக, இவர் உண்ணா விரதம் மேற்கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

மீகஹதென்ன பாடசாலையில், மாணவர்கள் சிலருக்கு அனுமதி வழங்குமாறு கோரி, மேற்படி நடவடிக்கைகளில் பிரதியமைச்சர் ஈடுபட்டிருந்தார்.

குறித்த பாடசாலையில், 10 மாணவர்களுக்கு அனுமதி வழங்க – அந்தப் பாடாசாலை நிர்வாகம் மறுத்திருந்தது.

தற்கொலை முயற்சிக்கு முயன்ற பிரதியமைச்சர் அன்றைய தினம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

 

இதனையடுத்து, பிரதியமைச்சர் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்து, பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.

இந் நிலையிலேயே, பாலித தேவரப்பெருமவுக்கு இருதய சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்