மதீனாவுக்கு செல்லவும் தயாராம்; ஞானசார தேரர் சவால் விடுக்கிறார்

🕔 July 8, 2016

Gnanasara thero - 01சாத்சாலிக்கு துணிவிருந்தால் தன்னுடன் பகிரங்க விவாதத்துக்கு வருமாறு, பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் சவால் விடுத்துள்ளார்

இந்த விவாதத்தை எங்குவேண்டுமானாலும் நடாத்தலாமெனவும் கூறியுள்ளார்.

தேவையேற்பட்டால் சவுதி அரேபியாவின மதினாவுக்குக் கூட – தான் செல்லத்தயாரெனவும் விபரித்தார்.

இதேவைள, தற்கொலைக் குண்டுதாரியாக மாறி தன்னைக்கொல்லப்போவதாக, ஆசாத்சாலி மிரட்டல் விடுத்தமை, சிங்கள பௌத்த சமுகத்துக்கு அதிர்ச்சியளிக்கு விடயமெனவும் கூறினார்.

இறைச்சிக்காக மாடுகள் வெட்டப்படுவதை பௌத்த சாசனம் அனுமதிப்பதில்லை என, தாம் போதனை செய்தமைக்காக – வெசாக் தினத்தன்று, மகியங்கணைப் பகுதியில் முஸ்லிம் கடும் போக்காளார்கள் பௌத்த கொடியை எரித்தாக குற்றஞ்சாட்டிய அவர் அதற்கு கண்டனமும் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்