பக்தாத் கார் குண்டு தாக்குதல்; உயிரிழந்தோர் எண்ணிக்கை 82 ஆக அதிகரிப்பு

🕔 July 3, 2016


ராக் தலைநகர் பக்தாத்தில் நேற்று சனிக்கிழமை இரவு இடம்பெற்ற கார்க்குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 82ஆக அதிகரித்துள்ளது.

உணவகம் மற்றும் கடைத் தொகுதிக்கு அருகில் இடம்பெற்ற இந்த குண்டுத் தாக்குதலில், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 200 ஆக உயர்ந்துள்ளது.

ரழான் பிற்பகுதி என்பதால், இங்கு பொருட்கொள்வனவில் மக்கள் அதிகளவில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோதே, இந்தக் குண்டு வெடிப்பு நடத்தப்பட்டுள்ளது.

சன நெருக்கடியுள்ள இடத்தில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலுக்கு, ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு உரிமை கோரியுள்ளது.Baghdad - 098Baghdad - 099

Comments

புதிது பேஸ்புக் பக்கம்