டயர் தருகிறார்களில்லை; மஹிந்த ராஜபக்ஷவின் புதிய கவலை

🕔 July 1, 2016

Mahinda - 0134னது வாகனங்களுக்கான டயர்களைக் கூட, அரசாங்கம் வழங்கவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்று மஹிந்தவிடம் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்;

“இந்த அரசாங்கம் எனக்கு உத்தியோகபூர்வ இல்லம், குண்டு துளைக்காத வாகனம் ஆகியவை மட்டுமன்றி, எனது வாகனங்களுக்கான டயர்களைக் கூட வழங்கவில்லை.

இந்த விடயம் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் கவனம் செலுத்துவார்கள் என நான் நம்புகின்றேன்.

பழுதடைந்துள்ள எனது ஜீப் வண்டி இன்னமும் திருத்தப்படவில்லை. பழுது பார்க்க, ஏன் காலதாமதம் ஏற்படுகின்றது என்பதனை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

புதிய கட்சி அமைப்பது குறித்த கேள்விக்கு காலம் பதில் சொல்லும்.

முதலில் மக்களை திரட்டிக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் எடுக்க வேண்டிய நடவடிக்கை பற்றி அறிவிக்கப்படும்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்