கோமாரியில் சற்றுமுன் மின்னல் தாக்கி, மூன்று பிள்ளைகளின் தந்தை பலி

🕔 June 15, 2015

Lighting - 01ரி. சுபோகரன் –

கோமாரி – மணற்சேனை பிரதேசத்தில் மின்னல் தாக்கி, தம்பிப் பிள்ளை சுதாகரன் (38 வயது) என்பவர், சம்பவ இடத்திலேயே பலியானார். இச்சம்பவம் இன்று திங்கட்கிழமை மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றது.

கோமாரியை சொந்த இடமாகக் கொண்ட இவர், அருகிலுள்ள மணற்சேனைக் கிராமத்தில் பயிர்ச் செய்கையில் ஈடுபட்டு வந்தார்.

இன்றைய தினம், இப் பிரதேசத்தில் இடி – மின்னலுடன் கூடிய மழை பெய்த வேளையில், மேற்படி நபர் – மணற்சேனையிலுள்ள தனது தோட்டத்திலுள்ள தகரக் கொட்டிலொன்றில் இருந்ததாகவும், இதன் போது ஏற்பட்ட மின்னல் தாக்கத்தில் சிக்கி, இவர் பலியானதாகவும் தெரியவருகிறது.

மின்னல் தாக்கி பலியான தம்பிப் பிள்ளை சுதாகரன் – மூன்று பிள்ளைகளின் தந்தையாவார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்