ஐம்பதுக்கும் மேற்பட்டோரின் வெளிநாட்டுப் பயணங்களுக்குத் தடை
நிதி மோசடி விசாரணைப் பிரிவில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட 50க்கும் மேற்பட்டவர்களின் வெளிநாட்டு பயணங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராபஜக்விஷன் மேலதிக செயலாளர் காமினி செனரத், தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் அனுச பல்பிட்ட உட்பட, நிதி மோசடி விசாரணைப் பிரிவில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட 50க்கும் அதிகமானோரின் வெளிநாட்டுப் பயணங்கள் இவ்வாறு தடை செய்யப்பட்டுள்ளன.
காமினி செனரத் உள்ளிட்ட பலர் – நீதிமன்ற உத்தரவுக்கு அமைய, ஞாயிறு தினங்களில் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலையாகி கையொப்பமிட்டு வருகின்றனர்.
பயணத் தடை விதிக்கப்பட்டுள்ள பலர் – கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் உயர் பதவிகளை வகித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அமைச்சுக்கள், திணைக்களங்கள், அதிகாரசபைகள் உள்ளிட்ட பல நிறுவனங்களில் இடம்பெற்றுள்ள பல கோடி ரூபா மோசடிகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றன.