நுரைச்சோலை வீட்டுத் திட்டம், ஒரு மாதத்தினுள் பயனாளிகளுக்கு வழங்கப்படும்; அமைச்சர் றிசாத் தெரிவிப்பு

🕔 June 24, 2016

Rishad - 007
– எம்.வை. அமீர் –

சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, அக்கரைப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட நுரைச்சோலை பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வீட்டுத் திட்டத்தை, இன்னும் ஒரு மாதத்துக்குள் மக்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் கைத்தொழில், வணிக அமைச்சருமான றிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்த, அம்பாறை மாவட்டத்துக்கான இப்தார் நிகழ்வு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவரும் அரச வர்தக கூட்டுத்தாபானத்தின் தலைவரும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமானஏ.எம். ஜெமீல் தலைமையில் இன்று  சாய்ந்தமருது லீடர் அஷ்ரப் வித்தியாலய முற்றலில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அமைச்சர் றிஷாத் பதியுத்தீன் மேற்கண்ட விடயத்தினைக் கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்;

“சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கென, சஊதி அரேபியாவின் நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்டு, இதுவரையில் மக்களுக்கு வழங்கப்படாமல் பாழடைந்து வருகின்ற நுரைச்சோலையிலுள்ள 500 வீடுகளையும், உரியவர்களுக்குப் பகிர்ந்தளிக்க வேண்டுமென கடந்த வாரம் ஜனாபதி மற்றும் பிரதமரைச் சந்தித்து கோரிக்கை விடுத்திருந்தோம்.

இந்த வீட்டுத் திட்டத்தினை பகிர்ந்தளிப்பதற்குத் தடையாக உள்ள விடயங்களை இனங்கண்டு, இன்னும் ஒரு மாத காலத்துக்குள் இவ்வீட்டுத்திட்டத்தை, மக்களுக்கு கையளிக்க நடவடிக்கை எடுப்பதாக பிரதம மந்திரியவர்கள் வாக்குறுதியளித்துள்ளதோடு, அவ்விடயத்தினைப் பொறுப்பெடுத்துள்ளார்கள் என்கிற நல்ல செய்தியை உங்களுக்கு நான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் என்றார்.

சுமார் 4000 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் கலந்துகொண்ட  இந்த இப்தார் நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும் பிரதி அமைச்சருமான எம்.எஸ். அமீர் அலி, நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப், கட்சியின் செயலாளர் சுபைதீன் ஹாஜியார், கனிய மணல் கூட்டுத்தாப்பான தலைவரும் பொத்துவில் தொகுதி அமைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. அப்துல் மஜீத், லக்சல தலைவரும் சம்மாந்துறைத் தொகுதி அமைப்பாளரும் தென்கிழக்குப் பல்கலைக்கழ முன்னாள் உபவேந்தருமான எஸ்.எம்.எம். இஸ்மாயில்,  உலமா கட்சித் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மற்றும்  ஆதரவாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Jameel - 007 Rishad - 008 Rishad - 006

Comments

புதிது பேஸ்புக் பக்கம்