தலை நகரில் 120 லட்சம் ரூபாய் பெறுமதியான ஹெரோயின் மீட்பு

🕔 June 24, 2016

Heroin - 098வெல்லம்பிட்டி மற்றும் கிராண்பாஸ் பகுதிகளில் 120 லட்சம் ரூபாய் பெறுமதியான  ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை மேற்படி பகுதிகளில் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இதன்போது 01கிலோ 50கிராம் எடையுடைய ஹெரோயின் கைப்பற்றப்பட்டதோடு, 02 பெண்கள் அடங்கலாக 06 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர்.

சந்தேகநபர்களிடம் இருந்த இரண்டு முச்சக்கர வண்டிகளும், இதன்போது பொலிஸாரால் மீட்கப்பட்டன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்