மஹியங்கனையில் முஸ்லிம்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

🕔 June 23, 2016

Protest - 9865ஹியங்கனை பிரதான வீதி மறிக்கப்பட்டு, அங்கு சிங்களவர்கள் ஆர்ப்பாட்ட நடவடிக்கையொன்றில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மஹியங்கனை பள்ளிவாசல் மீதான தாக்குதல் விவகாரத்தை அடுத்து அண்மைய நாட்களில் அங்கு வாழும் முஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள மக்களின் இனவாதச் செயற்பாடுகள் அச்சமூட்டும் வகையில் அமைந்திருந்தன.

இந்த நிலையில் பதற்றத்தைத் தணிக்க பல்வேறு தரப்பினரும் முயற்சிகளை மேற்கொண்டிருந்த நிலையில், முஸ்லிம்களுக்கு எதிரான கடுமையான வாசகங்கள் கொண்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு பதற்றமும், அச்சநிலையும் அதிகரித்தது.

இனவாத சுவரொட்டிகளை ஒட்டியவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தனர். எனினும் அச்சநிலை தொடர்ந்து கொண்டிருந்தது.

இந்த நிலையில் இனவாத சுவரொட்டி விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யுமாறு பொதுபல சேனாவின் ஆதரவுடன் சிங்களவர்கள் பெரும் ஆர்ப்பாட்டமொன்றில் குதித்துள்ளனர்.

மஹியங்கனை பிரதான வீதி மறிக்கப்பட்டு நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக மஹியங்கனை சுற்றுவட்டாரத்தில் பெரும் அச்ச நிலை தோன்றியுள்ளது.

இந்த நிலையில் பதற்றத்தைத் தணித்து, முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முன்வருமாறு அரசியல் தலைவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் வேண்டுகோள்களை முன்வைத்துள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்