நீதிமன்றின் முன்னால் துப்பாக்கிச் சூடு; நபர் பலி

🕔 June 23, 2016

Gun - 01ஹர நீதவான் நீதிமன்றத்தின் முன்னால் இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில், 35 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மஹர நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டுவரும் ஹெரோயின் தொடர்பான வழக்கொன்றில் ஆஜராக வந்த வேளையே, மேற்படி நபர் இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த குறித்த துப்பாக்கிதாரிகள், துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் ராகம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்களைக் கைதுசெய்ய விஷேட நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்